கேட்பரியைச் சாப்பிட்டு அதை ஹலாலானது என்பதைக் காண்பிக்க ஜாகிம் தயார்

jakimமலேசிய  இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை (ஜாகிம்)  கேட்பரி  சாக்லெட்டுகள்  ஹலாலானவை  என்று  சான்றளித்திருப்பதை  நிரூபிக்க  அதன்  அதிகாரிகள்  அதைச்   சாப்பிட்டுக்  காட்டவும்  தயாராக வுள்ளனர்.

அவை  ஹலாலானவை  என்பதில்  தங்களுக்குச்  சிறிதும்  ஐயமில்லை  என  ஜாகிம் முதுநிலை இயக்குனர்  முகம்மட்  அம்ரி அப்துல்லா  கூறினார்.

“கேட்பரி  ஹலாலானது  என  முடிவு  செய்யப்பட்டுள்ளது. ஹலால்  தகுதி வழங்கப்பட்ட எதுவும்  ஹலாலானதே  என்பதில் எங்களுக்கு நம்பிக்கை  உண்டு”, என்றாரவர்.

பயனீட்டாளர்களுக்குச்  சந்தேகமா,  தயக்கமா?  சாப்பிடாதீர்கள்  என்றாரவர்.