மே 31 தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் டிஏபி வேட்பாளராக போட்டியிட்ட தம் மகள் டியானா சோபி முகம்மட் டாவுட்டுக்கு ஆதரவாக செயல்பட்டது ஏன் என்று விளக்கம் கேட்டு யம்மி சமத்துக்கு அம்னோ கடிதம் அனுப்பியுள்ளது.
“தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் அவர் நடந்துகொண்ட விதத்துக்காக ஏன் அவரைத் தற்காலிகமாக தள்ளிவைக்கக்கூடாது அல்லது அம்னோவிலிருந்து நீக்கக் கூடாது எனக் காரணம் கேட்டு கடிதம் அனுப்பி வைத்திருக்கிறேன்”, என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார்.
ஐந்திலும் இன வெறியா
நல்ல நியாயமான வினா ? ஒரு தாயின் மனம் எங்கே போகும் , இருக்கவேண்டும் ?
கணவன் – மனைவி !
தாய் – பிள்ளை !
தந்தை – பிள்ளை !
இதற்கு இடையில் – கட்சி ??
தந்தை – தாய் – பிள்ளை – கட்சி !!
இங்கே யாருக்கு யார் விட்டுக்கொடுப்பது ??
கிளந்தான் மாநிலத்தில் , மனைவி அம்னோ – கணவன் பாஸ் கட்சி ! முடிவு – விவாகரத்து , திரெங்கானு – அப்பா -பாஸ் , மகன் அம்னோ , முடிவு குடும்பம் சிதைந்தது !. ஆக, குடும்ப உறவை அறுத்து கூறுபோடும் அளவிற்கு போகும் கட்சி முக்கியமா ?? யோசிப்போம் !