பொருள், சேவை வரியை(ஜிஎஸ்டி) விளக்குவதற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள கேலிச் சித்திரங்கள் கொண்ட விளம்பரப் பலகைகள் அந்த வரியைப் பற்றிச் சரியான முறையில் விளக்கமளிக்கவில்லை என்று ஜாரிங்கான் மலாயு மலேசியா(ஜேஎம்எம்) கூறியுள்ளது. அத்துடன், அவற்றுக்கு நிறைய செலவும் ஆவதாகக் கூறியது.
அவற்றில் எழுத்துகள் சிறியவை என்பதால் சாலைகளில் செல்வோரால் படிக்க முடிவதில்லை என ஜேஎம்எம் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா தெரிவித்ததாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது.
“விளம்பரப் பலகையில் கேலிச் சித்திரங்களைப் பயன்படுத்தி இருப்பது எதிரிடையான விளைவுகளைதான் ஏற்படுத்தியுள்ளது. அதில் உள்ள எல்லாவற்றையும் படிப்பதற்கு நேரமும் இருப்பதில்லை”, என்றாரவர்.
உதவாத இந்த விளம்பரம் தேவையற்ற ஒரு செலவு என்று குறிப்பிட்ட அஸ்வாண்டின், இந்த வீண் செலவு ஏன் என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அமாம் . யாரும் ரோட்ட பார்த்து கார் ஓட்ட கூடாது. எல்லோரும் விளம்பர பலகைய பார்த்துட்டே கார் ஓட்டுங்க. ஒரு நாளைக்கு ஒரு விபத்து கூட நடக்காட்டி எப்படி.