பிஎன்னுக்குத் திரும்பி வாருங்கள்- ஆசிரியர்களை அழைக்கிறார் அமைச்சர்

teachஆசிரியர்கள்  அரசியலுக்குத்  திரும்ப  வேண்டும்  அதுவும்  பிஎன்னில்  இணைய  வேண்டும்  என்று  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  வலியுறுத்தினார்.  ஆசிரியர்கள்  அரசியலில்  ஈடுபடுவதைத்   தடுத்தது  தவறு  என்றும்  அவர்  ஒப்புக்கொண்டார்.

“அம்னோவோ, மஇகாவோ,  மசீசவோ,  பிஎன்னோ  ஆசிரியர்களே  அக்கட்சிகளை  முன்னுக்குக்  கொண்டுசெல்வோர்.

“10, 12  ஆண்டுகளுக்குமுன்  ஒரு  தவறு  செய்தோம். ஆசிரியர்கள்  அரசியல்  கட்சிகளில்  பொறுப்பு  வகிக்கக்கூடாது  என்று  தடுத்தோம். அதனால்  அவர்கள்  விலக  வேண்டிய  கட்டாயம்  ஏற்பட்டது.

“இப்போது  ஆசிரியர்களை (அரசியலில்  ஈடுபட) அனுமதிக்கிறோம். அதனால்,  ஆசிரியர்கள்  திரும்பி வந்து  எங்களுக்கு  உதவ  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்கிறேன்”. கோலாலும்பூரில்  ஆசிரியர்களைப்  பாராட்டும்  ஒரு  நிகழ்வில்  பேசியபோது  தெங்கு  அட்னான்  இவ்வாறு  கேட்டுக்கொண்டார்.ஆசிரியர்கள்  அரசியலுக்குத்  திரும்ப  வேண்டும்  அதுவும்  பிஎன்னில்  இணைய  வேண்டும்  என்று  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  வலியுறுத்தினார்.  ஆசிரியர்கள்  அரசியலில்  ஈடுபடுவதைத்   தடுத்தது  தவறு  என்றும்  அவர்  ஒப்புக்கொண்டார்.

“அம்னோவோ, மஇகாவோ,  மசீசவோ,  பிஎன்னோ  ஆசிரியர்களே  அக்கட்சிகளை  முன்னுக்குக்  கொண்டுசெல்வோர்.

“10, 12  ஆண்டுகளுக்குமுன்  ஒரு  தவறு  செய்தோம். ஆசிரியர்கள்  அரசியல்  கட்சிகளில்  பொறுப்பு  வகிக்கக்கூடாது  என்று  தடுத்தோம். அதனால்  அவர்கள்  விலக  வேண்டிய  கட்டாயம்  ஏற்பட்டது.

“இப்போது  ஆசிரியர்களை (அரசியலில்  ஈடுபட) அனுமதிக்கிறோம். அதனால்,  ஆசிரியர்கள்  திரும்பி வந்து  எங்களுக்கு  உதவ  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்கிறேன்”. கோலாலும்பூரில்  ஆசிரியர்களைப்  பாராட்டும்  ஒரு  நிகழ்வில்  பேசியபோது  தெங்கு  அட்னான்  இவ்வாறு  கேட்டுக்கொண்டார்.