பேராக் டிஏபி-இல் நிலவும் உள்கட்சிப் பூசல்களால்தான் டிஏபி தெலோக் இந்தானில் தோற்றதே தவிர பாஸின் ஹுடுட் திட்டத்தால் அல்ல.
இவ்வாறு கூறிய கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர் தலைவர் நுருல் இஸ்லாம் முகம்மட் யூசுப், பிஎன் வேட்பாளர் மா சியு கியோங், 2013-இல் பெற்றதைவிட கூடுதல் வாக்குகளைப் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“டிஏபி வாக்குகள் கணிசமான அளவில் பிஎன்னுக்குச் செல்லவில்லை என்கிறபோது டியானா சோபியா களமிறக்கப்பட்டதைப் பிடிக்காத தரப்பினர் தேர்தலைப் புறக்கணித்தனரா?
“அல்லது, அவரின் தாயார் பெர்காசா உறுப்பினர் என்பதால் வாக்காளர்கள் அவரை ஏற்கவில்லையா?”, என்றவர் வினவினார்.
யுசிஎஸ்ஐ பல்கலைக்கழக நடத்திய ஆய்வு ஒன்றில் சீன வாக்காளர்களில் 12 விழுக்காட்டினர் மட்டுமே ஹுடுட் திட்டம் குறித்து கவலை தெரிவித்தார்கள் என்றும் நுருல் இஸ்லாம் கூறினார்.
“இது ஹுடுட் விவகாரத்தால் டிஏபி-க்குப் பிரச்னை இல்லை என்பதைக் காண்பிக்கிறது”, என்றாரவர்.
ஏறத்தாழ பத்து நாட்கள் தெலுக் இந்தானில் இருந்து, பரப்புரைகளில் கலந்து கொண்டேன். DAP [மன்னிக்கவும் டயானா] தோல்வியுற்றதில் மேலே நீங்கள் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை. மேலும்,. டயனாவுக்கு வோட்டு போடுங்கோ என்று மட்டுமே கடத்தினார்கள்.ராக்கெட்டுக்கு ஒட்டு போடுஙக என்று எவரும் வாய் திரக்கவில்லை. லிம் கிட சியாங், லிம் குவான் எங் உட்பட. போதாக்குறைக்கு, இவர்களுக்குள்ளேயே குறைந்தது பத்து வகையான ‘டீம்’ ஆக, கட்சி தோல்வியை தழுவியதற்கு முழுக்காரணமே உள்கட்சி பூசல்தான்.
இல்லையென்று சொல்லிவிடமுடியாது கட்சி பூசலில் , உள்ளூர் ஜ செ கட்சியினர், தனக்கு இடமில்லை என்ற காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் துணைவியார் அவரது குழுவினர் இடம் கிடைக்கவில்லை என்ற சுபெர்மன் குழுவினர் இப்படி அடுக்கிக்கொண்டு போகலாம்???