நாடாளுமன்றம் அரசாங்கத்தின் சட்ட வரைவுகளையும் தீர்மானங்களையும் நிறைவேற்றும் ஒரு ரப்பர் முத்திரையாக மட்டும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தால் அது பொதுப்பணத்தை விரயமாகும் அமைப்பாகத்தான் விளங்கும்.
“பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் முன்வைக்கும் பரிந்துரைகள் ஏற்கப்படுவதில்லை. கேள்விகள் கேட்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறோம். நிறைய எம்பிகள் இருப்பதால் கேள்விகள் கேட்கும் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்”, என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கூறினார்.
எதிரணியினர் கூடுதல் விவகாரங்களை எழுப்பவும் விவாதிக்கவும் இடமளிக்க நாடாளுமன்றத்துக்கு அவசர சீரமைப்பு தேவை என்றாரவர்.
ஆமாம் சுரேந்தர் சொல்வது நியாயம்தான், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் பின் கதவு வழியாக செல்லவில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாடாளுமன்றத்தில் நாங்களும் போகிறோம் என வாழாவெட்டியாக இருந்திடமுடியாது. அவர்களுக்கும் பேசிட வாதிட வாய்ப்பளிக்கவேண்டும், அந்த வாய்ப்பை தராத மன்றம் என்ன நாடாளுமன்றம்?? அதற்க்கு ஏன் கோடிக்கணக்கில் பணத்தை விரயமாக்கவேண்டும், பாரிசான் காரர்களே கூடி முடிவெடுத்துவிடலாமே. எதற்கு நாடாளுமன்றம் ???.