மகாதிர்: ஜயிஸ் செய்தது தப்பு

mahaமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  சிலாங்கூர்  இஸ்லாமிய  சமயத் துறை(ஜயிஸ்)  மீண்டும்  குர்ஆனை   வாசிக்க  வேண்டும்  என்று  வலியுறுத்தினார். ஒரு  திருமணத்தைத்  தடுப்பது தவறான  செயல்.

திருக்குர்ஆன்  முஸ்லிம்-அல்லாதாரின்  உரிமைகளை  மதிக்கிறது.  மேலும்,  மற்றவர்களைக்  கண்காணிக்கவும்  கட்டுப்படுத்தவும்  சமயத்தைப்  பயன்படுத்தக்கூடாது  என்று  மகாதிர்  கூறினார்.

“இதெல்லாம்   குர்ஆன்  போதனைகளைப்  பின்பற்றாமல்  யாரோ  ஒருவர்  சொல்வதைக்  கேட்டு  நடப்பதால்   வரும்  வினைகள்”.

யுனிவர்சிடி  இஸ்லாம்  அந்தாராபங்சா(யுஐஏ)-இல், ‘சமகால  முஸ்லிம்களின்  வாழ்க்கைமுறை’  என்ற  தலைப்பில்  உரையாற்றிய  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  மகாதிர்,   ஜயிஸ்  ஞாயிற்றுக்கிழமை  இந்து  திருமணச்  சடங்கிலிருந்து  மணப்பெண்ணை  இட்டுச்  சென்ற  சம்பவம்  பற்றிக்  கருத்துரைத்தபோது  இவ்வாறு  கூறினார்.