எம்பி: ஜயிஸின் நடவடிக்கை “வெட்கக்கேடானது”

khalidசிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட் இப்ராகிம்,  ஒரு  இந்து  திருமணத்தைத்  தடுத்த  சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறையின்  செயல்  திருமணக்  “கொண்டாட்டதையே”  கெடுத்து  விட்டது  என்றும்  அது  “வெட்கக்கேடான”  செயல்  என்றும்  கூறியுள்ளார்.

ஜயிஸ்  மேற்கொண்டது  ஒரு  “அதிரடிச் சோதனை”யா  என்று  வினவியதற்கு   அவர்  இவ்வாறு  கூறினார்.

“ஜயிஸுக்கு  அது  அதிரடிச்  சோதனை அல்ல.. போலீஸ், அதிரடிச் சோதனைதான்  என்கிறது. நமக்கு  அது ஒரு  வெட்கக்கேடான   செயல்.

“திருமணம்  என்பது  ஒரு  முக்கியமான  நிகழ்வு.  அதைக் கெடுக்கக்கூடாது”, என்று  காலிட்  கூறினார்.