பெட்ரோலுக்கும் டீசலுக்கும் ஜிஎஸ்டி உண்டா?

rafizi2015, ஏப்ரல் 1-இல், அமலுக்குவரும்  பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)யிலிருந்து  பல  பொருள்கள்  விலக்கு  பெறும்  என  அரசாங்கம்  நீண்ட  பட்டியல்  போட்டுக் காட்டுகிறது. ஆனால்,  வாழ்க்கைச்  செலவினத்துடன்  நெருக்கமான  தொடர்புகொண்ட  பெட்ரோலும்  டீசலும்  அப்பட்டியலில்  இல்லை.

இதனால், அவ்விரு  பொருள்களுக்கும் ஜிஎஸ்டி  விதிக்கப்படுமா, இல்லையா   என்பதைத்  தெரிந்துகொள்ள  விரும்புகிறார்   பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி.

“(பிரதமர்) நஜிப்  அப்துல்  ரசாக்,  பெட்ரோலுக்கும்  டீசலுக்கும்  ஜிஎஸ்டி  வரி  விதிக்கப்படுமா என்பதை  இயன்ற  விரைவில்  உறுதிப்படுத்த  வேண்டும்”, என்றாரவர்.