முகநூலில் பதிவிடுவதற்காக ஆசிரியர்களைக் குறைசொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தும் தேசிய ஆசிரியர் சங்கம் (என்டியுபி) எதைப் பதிவிடுவது என்பதை முடிவுசெய்வது ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்றும் அது சட்டத்தை மீறாதிருக்க வேண்டும்- அதுதான் முக்கியம் என்றும் கூறியது.
அதில் இதைத்தான் பதிவிடலாம், இதைப் பதிவிடக்கூடாது என்று யாரும் அதிகாரம் செலுத்தக்கூடாது என்று என்டியுபி தலைவர் ஹஷிம் அட்னான் கேட்டுக்கொண்டார்.
“அது தனிப்பட்ட ஒருவரின் உரிமை. அதனால் அதைத் தொடாதீர்கள். அதில் யாரும் தலையிட நினைத்தால் அவர்கள் சுதந்திரம் என்ற கோட்பாட்டுக்குப் பொருள் புரியாதவர்கள்”, என ஹஷிம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
என் யு டி பி மானத்தோடு ஒரு கருத்தை சொல்வது வியப்புகுறியது. தொழிற்சங்கத்திற்கான எந்த போராட்ட உணர்வும் அற்ற செத்த பாம்பு அது. அதற்கு அரசுக்கு தலையாட்டவும் வாலாட்டவும் மட்டும்தான் தெரியும். இப்ப என்ன திடீர் என்று தனி மனித உரிமை பற்றியெல்லாம் பேச்சு…