மந்திரி புசாருக்கு ஆயர் பாராட்டு

bishopஞாயிற்றுக்கிழமை, சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறை (ஜயிஸ்) பெட்டாலிங்  ஜெயா  கோயில்  ஒன்றில்  இந்து முறைப்படி  நடந்துகொண்டிருந்த  ஒரு  திருமணத்தைத்  தடுத்து  நிறுத்தி  மணப்பெண்ணை  விசாரணைக்காக  அழைத்துச்  சென்றதை  “வெட்கக்கேடான  செயல்”  எனக்  கண்டித்த  சிலாங்கூர்  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிமை  கத்தோலிக்க ஆயர்  பால்  டான்  ச்சீ  இங்  பாராட்டியுள்ளார்.

“தப்பிதமாக  நடந்துகொள்ளாது  இங்கிதமாக  நடந்துகொள்ள  வேண்டும்  என  உயர்  அதிகாரத்தில்  உள்ள  ஒருவர்  வலியுறுத்தி  இருப்பது  இதுவே  முதல் தடவை என  நினைக்கிறேன். இதை  சமயவெறிக்கு  எதிராக  நல்லறிவை நிலைநாட்டும்  போராட்டத்துக்குக்  கிடைத்த  சிறு  வெற்றி  எனலாம்”, என்றாரவர்.