டிஏபி: தலைமையகத்தைத் தாக்கிய கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

reportடிஏபி, தன்  தலைமையகத்துக்கு  வெளியில்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  அம்னோ  இளைஞர்களுக்கு  எதிராக  போலீஸ்  நடவடிக்கை  எடுக்காமலிருப்பது  குறித்து  அமலாக்க  அமைப்பு நேர்மை கண்காணிப்பு  ஆணையத்திடம் (இஏஐசி)  புகார்  செய்துள்ளது.

போலீசார் நடைமுறை விதிகளை  மீறி  இருப்பதாக  செகாம்புட்  எம்பி  லிம்  லிப்  எங்  குற்றஞ்சாட்டினார்.

“கைது  செய்யப்பட்ட  14 நாள்களுக்குப்  பின்னர், வழக்கு  சட்டத்துறைத்  தலைவர் அலுவலகத்துக்கு  அனுப்பப்பட்டிருக்க  வேண்டும்.

“ஆனால், இன்று  14வது  நாள். இதுவரை  நடவடிக்கை  இல்லை”, என  லிம்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

அந்த  ஆர்ப்பாட்டம்  நடந்த  நான்காம்  நாள்,  டிஏபி  தலைமையகத்தை  எரிக்கப்போவதாக  எச்சரித்த  அம்னோ  இளைஞர்  தலைவர்கள்  அறுவரை  போலீசார்  தடுத்து வைத்தனர்.