மணப்பெண் முஸ்லிம்- அல்லாதவர் என்று ஷியாரியா உயர் நீதிமன்றத்தால் அறிவிக்க முடியும்

musaமணப்பெண்  முஸ்லிம்  பெயரைக்  கொண்டிருந்ததால்  இஸ்லாமிய  சமய  அதிகாரிகள் இந்து  திருமணத்தை  தடுத்து  நிறுத்திய  விவகாரத்துக்கு  எளிதாகத்   தீர்வுகாண  முடியும்  என்கிறார்  ஷியாரியா  வழக்குரைஞர்  சங்கத்  தலைவர்  மூசா ஆவாங்.

32-வயது  ஸரினா  அப்துல்லா  மஜித், தம்மை  முஸ்லிம்- அல்லாதவர்  என்று அறிவிக்கக்  கோரி   ஷியாரியா  நீதிமன்றத்திடம்  விண்ணப்பம்  செய்யலாம்   என்றாரவர்.

ஒருவர்  முஸ்லிம்- அல்லாதவர்  என்று  அறிவிக்கும்  அதிகாரம்  ஷியாரியா  உயர்  நீதிமன்றத்துக்கு  உண்டு  என  மூசா கூறினார்.