கடந்த ஆண்டு பதின்ம வயது பெண்ணொருவரிடம் பாலியல் வல்லுறவு கொண்ட 19-வயது கல்லூரி மாணவனுக்கு இன்று அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் பிரம்படி தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தது.
ஒரு மருத்துவர், அவனின் பெற்றோர், சில பார்வையாளர்கள் முன்னிலையில் அய்னுர் அஸ்ரிக் ஐஸாமுடினுக்கு எட்டு பிரம்படிகள் கொடுக்கப்பட்டன.
“ஜீன்ஸ் அணிந்திருந்தாலும் ஒவ்வொரு தடவையும் பிரம்பால் அடிக்கப்பட்டபோது அய்னுர் அஸ்ரிக் வலியால் துடிப்பதைக் காண முடிந்தது”, என ஸ்டார் செய்தியாளர் கூறினார்.
“ஐந்தாவது அடிக்குப் பின்னர் வலியால் முனகினார், அவர் கண்ணீரை அடக்கிவைக்க முயல்வதும் தெரிந்தது”, என்றாரவர்.
எதற்கு ஹுடுட் சட்டம், திருட்டு .குண்டர் கும்பல் ,கொலை, கொள்ளை,பாலியல்,ஏமாற்றுதல் இன்னும் இ தைப்போன்ற பல்வேறு குற்றங்களுக்கு இதைப்போன்ற பிரம்படி கொடுக்கலாமே ?? இதுவும் ஒரு வகையான தண்டனை தானே!!