மத மாற்றம் காரணமாக கிளம்பும் குழந்தை பராமரிப்பு சச்சரவுகளை தீர்த்து வைப்பதற்கு போலீஸ் நடவடிக்கையில் இறங்குமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.
எஸ். தீபாவுக்கு அவரது குழந்தையை பராமரிக்கும் உரிமை இருக்கிறது. ஆகவே, போலீ
சார் தீபாவின் மகனை இஸ்லாத்துக்கு மதம் மாறிவிட்ட அவரது முன்னாள் கணவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் நேன்சி சூகிரி கேட்டுகொண்டிருந்தற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் ஹமிடி இவ்வாறு கூறினார்.
“நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் அவருடனும் (நேன்சி), சட்டத்துறை அலுவலகத்துடனும் எம்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிப்பேன்”, என்று இன்று செராஸ்சில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஹமிடி கூறினார்.
இதன் தொடர்பாக நான்சி சுக்ரி தமது பதவி விலகினால் , அமைச்சர் அமிடி ஆட்டம் காணுவார் !
முட்டாள்களால் நாடு முட்டால் ஆக்கபடுகிறது……..!
வெளி நாடுகளுக்கு இந்த செய்தி பரவட்டும் ,
உலகம் நெருக்கடி கொடுக்கட்டும் ……!
தகுதி இல்லாத ஒருவருக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுத்தால் உல் நாட்டு விவகாரம் சிரிப்பாய் சிரிக்கும் .அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் இந்த சாஹிட் அமிடிக்கு ,பிரதமர் ஆப்பு வைக்க வில்லை என்றால் ,பரிசான் கதை சிரிப்பாய் சிரிக்கும் அடுத்த பொது தேர்தலில்’இண்டொன்நேசியா காரனை எல்லாம் உள்துறை அமைச்சரா போடலாமா ?
ஸாகிட்டின் குடும்பப் பிரச்சனையே இன்னும் தீர்க்க முடியவில்லை! அவர் எங்கே தீபாவின் பிரச்சனையைத் தீர்க்கப் போகிறார்!
இந்த சின்ன பிரச்சனைகளை தீர்க்க முடியாதவனை எப்படி உள் நாட்து அமைச்சர் வேலையை செய்ய போகிறான்