முகநூலில், சாபா மலேசியாவிலிருந்து பிரிந்துசெல்ல தூண்டிவிடுவோருக்கு எதிராக அதிகாரிகள் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என நகர்ப்புற, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் நேற்று வலியுறுத்தினார்.
இது, தேசிய பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் பாதிக்கும் என்பதால் ஆபத்தானது என அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் சாபா பாரிசான் நேசனல் செயலாளருமான அப்துல் ரஹ்மான் எச்சரித்தார்.
இப்பிரச்னை கைமீறிப் போவதற்குள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்று அந்த கோட்டா பெலூட் எம்பி கூறினார்.
ஈழத்தில் மக்கள் சுதந்திரமாக வாழ நினைப்பது தவறாகாது.அதுபோல சபா மக்கள் நினைத்தால் அது அவர்களுடைய விருப்பம்.
மலேசியாவுக்கு முன் நோர்த் போர்னியோ என்ற சாபா வில் கிறிஸ்தவர்களே அதிகமாக இருந்தனர் ஆனால் இன்று முஸ்லிம்கள் ஆதிக்கம் செழுத்துகின்றனர்- ஏன்? எல்லாம் பதவிக்காக மதம் மாறிய துரோகியும் துன் முஸ்தபா மற்றும் ஹரிஸ் சாலே போன்ற மக்களாட்சி எதிரிகள் தான் காரணம்– பணத்தை காட்டியும் மற்ற வழிகளில் அழுத்தம் கொடுத்து படிப்பறிவில்லா மக்களை மதம் மாற்றியும் பிலிபிநோக்களுக்கும் இந்தோக்களுக்கும் கள்ள அடையாள அட்டைகொடுத்து முஸ்லிம்களை அதிகமாக்கி தற்போதுள்ள அரசியல் வாதிகள் குளிர் காய்கின்றனர் – தேசிய முன்னணியிலிருக்கும் அம்னோ தவிர மற்ற அரசியல் வாதிகளுக்கு வாயை திறக்க முடியாது. இது போன்றே சரவாக்கிலும் –
சொன்னாலும் சொல்லா விட்டாலும் இது நடக்கதான் போகிறது. பீ என் நடை முறையாலே இது தானாகவே நடக்கும்.யாரும் தூபம் போட்டு பஜனை பாட வேண்டயதில்லை .
இவர்களுக்குப் பிடிக்காத, இவர்களின் சுகபோகங்களுக்குக் குந்தகம் ஏற்படுத்தக் கூடிய எதை செய்தாலும் உடனே எச்சரிக்கைதான்…! ஏன் சிலர் அப்படி பிரிந்து போக வேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்று யோசிக்க வேண்டாமா..?! அதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டாமா..?! 18, 20 அம்ச மலேசிய ஒப்பந்தம் என்ன ஆச்சு..?! அதற்கு நல்ல, நாணயமான பதில் சொல்லவே தினறுகிறீர்களே..!! 1963ல் சொன்னபடி நடந்து கொள்ளுங்கள்; பிரிவினை பேச மாட்டார்கள்.
சபா பிரிந்தால் நாட்டில் பி என் ஆட்சி கவிழ்ந்து விடுமே !!! ஊ… ஊ… ஊ…