ஸரினா, வயதுக்கு வந்தவர். சமயத்தைத் தேர்வுசெய்யும் உரிமை அவருக்கு உண்டு

ysayஉங்கள்  கருத்து:  ‘சமயம்  ஒரு தனிப்பட்ட  விவகாரம்.  அதை  ஏன்  நீதிமன்றம் தீர்மானிக்க  வேண்டும்?’

ஸரினா  நீதீமன்றம்  செல்ல  வேண்டும்  என்பது  அரசமைப்புக்கு  விரோதமானது

துபாய்பீசி:  இந்து  மணப்பெண்  ஸரினா  அப்துல்  மஜித்  வயதுக்கு  வந்தவர்.  தன்  சமயத்தை  அவரே  முடிவுசெய்யலாம்.  அதற்குத்  தாய்  அல்லது  தந்தையின்  அனுமதி  தேவையில்லை.  சமயத்தை  மாற்றிக்கொள்ளும்  அவரது  முயற்சிக்கு  ஆதரவாக  அவரின்  தந்தை  கையொப்பமிட  மறுத்துவிட்டதாக  அண்மையில்  செய்தி  பார்த்தேன்.

பெயரிலி: சமயம்  ஒரு  தனிப்பட்ட  விவகாரம். தனிப்பட்ட  ஒருவரின்  விருப்பத்தேர்வு.  அதை  எதற்கு  நீதிமன்றம்  முடிவு  செய்ய  வேண்டும்?

சீனியர்:  அவர்  ஒரு  முஸ்லிம்  இல்லை  என்றால்  எதற்கு  ஷியாரியா  நீதிமன்றம்  செல்ல  வேண்டும்?

அபா  நாமா: ங்கே  கூ  ஹாம்,  வெறும்  அறிக்கை  விடுவது  போதாது.  வேலை  செய்யத்தான்  உங்களைத்  தேர்ந்தெடுத்தோம்,  அறிக்கை  விடுவதற்கு  அல்ல. என்ஆர்டி  அவரது  சத்திய  பிரமாணத்தை  நிராகரித்தால்……. இன்னொரு  அறிக்கை  விடுவீர்களா?

பெயரிலி _3f94: அபா  நாமா,  என்ஆர்டி  ஸரினாவின்  சத்திய  பிரமாணத்தை  நிகாரித்தால்  அதை  ஏற்றுக்கொள்ளும்படி  கட்டாயப்படுத்த  அவர்  சமயச்  சார்பற்ற  நீதிமன்றத்தின்  உதவியை  நாடலாம்.

பெயரிலி #20513663: ங்கே  கூ  ஹாம்,  குரலற்றவர்களுக்கு,  பாதுகாத்துக்கொள்ளும்  வகையற்றவர்களுக்குப்  பரிந்துபேசும்  உங்களுக்கு  நன்றி. இப்படிப்பட்ட  அடக்குமுறைச்  சட்டங்கள்  எல்லாம்  ஏழைகளைத்தான்  அதிகம்  பாதிக்கின்றன. பணக்காரர்கள்  இப்படிப்பட்ட  ‘சமய’ப்  பிரச்னைகளை  எதிர்நோக்கும்போது  வெளிநாடு  சென்று  ‘மறைந்துபோவார்கள்’.

ஆனால்,  நேர்மையாக,  உழைத்துப்  பிழைக்கும்  ஸரினா  போன்றவர்களின்  நிலை  என்ன?  இதுகாறும்   இந்து,  முஸ்லிம்  தலைவர்கள்தான்  ஸரினாவுக்காகப்  பரிந்து  பேசுவதைப்  பார்க்கிறோம்.  கிறிஸ்துவ,  பெளத்த  அமைப்புகளின்  நிலை  என்ன? ‘அவர்களின்  மக்களுக்கு’  மட்டும்தான்  குரல்  கொடுப்பார்களா?

நியாயவான்:  ஸரினாவின்  தந்தையின்  கூற்று  குட்டையை  மேலும்  குழப்பி இருக்கிறது. அவரது  அறிக்கையால்,  தான்  செய்தது  நியாயமே  என்று  வாதாட  ஜாயிஸுக்கு  மேலும்  ஒரு  காரணம்  கிடைத்து  விட்டது.

50 ஆண்டுகளுக்குமேலாக  இணக்கத்துடனும்  சகிப்புத்தன்மையுடனும்  வாழ்ந்துவரும்  நம்மிடையே  எளிதில்  தீர்வுகாண  வேண்டிய  இதுபோன்ற   பிரச்னை  எழுவதைக்  காண  வருத்தமளிக்கிறது.