முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், ஜோகூர் வீட்டுவசதி சட்டவரைவு தொடர்பிலான சர்ச்சையில் மாநில சுல்தானுக்கு ஆலோசனை கூறுமளவுக்கு ஜோகூர் மந்திரி புசார் காலிட் நோர்டின் திறமைப்படைத்தவர் அல்ல என்று நினைக்கிறார்.
சட்டவரைவில் திருத்தங்கள் செய்யப்பட்டாலும், காலிட் மலாய் மரபைப் பின்பற்றி சுல்தானுக்கு அடங்கிப் போவார் என முன்னாள் பிரதமர் கூறினார்.
“சுல்தான் ஏதாவது சொன்னால் அதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதுதான் மலாய் மரபு.
“அதனால், இங்கு எம்பி சுல்தானுக்கு ஆலோசனை கூறப்போவதில்லை, சுல்தான்தான் அவருக்கு ஆலோசனை கூறுவார்”, என்றாரவர்.
ஐயா ! மலேசிய திருநாட்டில் பேரரசரும் சுல்தான்களும் மாநில ஆளுநர்களும் இருக்கும் போது எதற்கு பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம்?
ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஒரே குஷ்டமப்பா…