ஷஹிடான்: மாநில நிர்வாகத்தில் சுல்தான் தலையிடக் கூடாது

shahidanபிரதமர்துறை  அமைச்சர்   ஷஹிடான்  காசிம்  ஹோகூர்  வீட்டுவசதி  சொத்து  சட்டவரைவுமீது  அதிருப்தி  தெரிவித்துள்ளார். அச்சட்டவரைவு  தொடக்கத்தில்  மற்றவற்றோடு  வாரிய  உறுப்பினர்களை  நியமனம்  செய்யும்  அதிகாரத்தையும்  சுல்தானுக்கு  வழங்கியது. அதுதான்  அவருக்குப்  பிடிக்கவில்லை.

கூட்டரசு  அரசமைப்புக்கு  முரணான  எதையும்  அரசாங்கம்  பொறுத்துக்கொள்ளாது  என்று,  நாடாளூமன்ற வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  பேசியபோது  ஷஹிடான்  கூறினார்.

“(சுல்தான்  தலையிட்டால்) பிரச்னைகள்  மேலும்  மோசமாகும்”, என்றார்.

மாநில  ஆட்சியாளர்கள்  மாநில  நிர்வாகத்தில்  தலையிட்டால்  ஆட்சியாளர்  அமைப்பும்  மாசுபடும்  என்றும்  ஷஹிடான்  குறிப்பிட்டார்.