காணாமல்போன எம்எச் 370 விமானத்தில் பயணித்த சீனப் பயணிகளின் குடும்பத்தார் தாங்களே விமானத்தைத் தேடும் முயற்சியில் இறங்கி இருப்பதை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை (டிசிஏ) வரவேற்றுள்ளது.
“அதை நாங்களும் கேள்விப்பட்டோம். அவர்கள் போக்குக்கு விட்டுவிட விரும்புகிறோம்”, என்று டிசிஏ தலைவர் அஸ்ஹாருடின் அப்துல் ரஹ்மான் கூறினார். அவர்கள் ஏதாவது கண்டுபிடித்தால் கூட்டு ஒருங்கிணைப்பு மையத்துடன் பகிர்ந்துகொள்ளலாம், அது தேடலுக்கு உதவியாக இருக்கும் என்றாரவர்.
மலேசிய அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்றுதானே,அவர்களே முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.இது நம் நாட்டுக்கு அவப்பெய்ர்தானே.இதை கூடவா நமது டிசிஎ தலைவருக்கு புரிந்துகொள்ள் முடியவில்லை.
சீன பயணிகளின் குடும்பத்தார்,நண்டு காலை பிடித்து கொண்டு
கடலில் இறங்கி விமானத்தை தேடபோவதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.