கோபிந்த்: சிலாங்கூரில் ஹுடுட்டை எதிர்ப்பதில் டிஏபி உறுதியாக இருக்கும்

gobindsingசிலாங்கூரில்  ஹுடுட்டைக்  கொண்டுவரும்  முயற்சியை டிஏபி  முழுமூச்சாக  எதிர்க்கும்  என  கோபிந்த்  சிங்  டியோ  கூறினார்.

ஹுடுட் சட்டத்தை  அறிமுகப்படுத்தும்  சாத்தியத்தை  ஆராய  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளும்  தீர்மானம்  ஒன்று சிலாங்கூர்  சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்யப்பட்டுள்ளதாக  மலாய்  மெயில்  இணையதளத்தில்  வெளிவந்துள்ள  செய்திக்கு  எதிர்வினையாக  அவர்  இவ்வாறு  கூறினார்.

தீர்மானத்தை  முன்வைத்தது  பாஸ்  அல்ல.  அம்னோவின்  சுங்கை  ஆயர்  தாவார்  சட்டமன்ற  உறுப்பினர் கம்ரோல்  ஸாக்கி  அப்துல்  மாலிக்.

ஆனால், அத்தீர்மானத்தை  விவாதத்துக்கு  ஏற்பதா  இல்லையா  என்பதைச்  சட்டமன்றத்  தலைவர்  ஹன்னா  இயோ  இன்னும்  முடிவு  செய்யவில்லை.

“டிஏபி-இல்  உள்ள  நாங்கள்  ஹுடுட்டைக்  கொண்டுவரும்  எந்தவொரு  சட்டமும்  அரசமைப்புக்கு  எதிரானது என்பதை  ஏற்கனவே  சொல்லி  இருக்கிறோம்.  திரும்பத் திரும்ப  வலியுறுத்தி  இருக்கிறோம்.

“குற்றவியல்  சட்டங்களை  நாடாளுமன்றத்தால்  மட்டுமே  கொண்டுவர  முடியும்,  சட்டமன்றங்கள்  கொண்டுவர  முடியாது”,  என்று   சிலாங்கூர்  டிஏபி  துணைத்  தலைவரும்  பூச்சோங்  எம்பியுமான  கோபிந்த்  கூறினார்.