வழக்குரைஞர் மன்றத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்

barமலேசிய  வழக்குரைஞர்  மன்றம்,  பக்காத்தான்  ரக்யாட்டின்  சட்டப்  பிரிவுபோல்  நடந்துகொள்வதாகவும்  எதிரணி-ஆதரவு  அறிக்கைகள் விடுவதன்வழி  அதன்  அதிகாரத்தைத்  தவறாகப்  பயன்படுவதாகவும்  ஒரு  வழக்குரைஞரான  முகம்மட்  கைருல்  அஸாம்  அப்துல்  அசீஸ்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அது  நியாயமாக  நடந்துகொள்வதை  உறுதிப்படுத்த  வழக்குரைஞர்  மன்றத்தின்  அதிகாரத்தைக்  கட்டுப்படுத்துவது   அவசியம்”, என்றாரவர்.

மலேசியாகினிக்கு  எதிரான அவதூறு  வழக்கைக்  கைவிடுமாறு பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  வழக்குரைஞர்  மன்றத்  தலைவர் கிறிஸ்டபர்  லியோங்  வேண்டுகோள்  விடுத்திருப்பதை  அடுத்து  கைருல் இவ்வாறு  கேட்டுக்கொண்டார்.