குழந்தை பராமரிப்பு சர்ச்சையில் ‘நடுவுப்பாதை’யே ஐஜிபி-இன் வழியாகும்

igpகுழந்தை  பராமரிப்பு  விவகாரத்தில்  ஷியாரியா,  சிவில்  நீதிமன்றங்கள்  வழங்கும்  தீர்ப்புகள்  முரண்படும்போது போலீஸ்  நடுவுப்பாதையைக்  கடைப்பிடிக்கும்  என  இன்ஸ்பெக்டர்  ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறுகிறார்.

போலீஸ், ஷியாரியா அல்லது  சிவில்  நீதிமன்ற  உத்தரவுகளை  அமல்படுத்தாமல்,    பாதிக்கப்பட்ட  பிள்ளைகளைக்  குழந்தை பராமரிப்பு  இல்லத்தில்  வைத்திருக்கும்,  அதுவே  பெற்றோர்  இருவருக்கும்  நியாயமானதாக இருக்கும்  என்று  காலிட் சொன்னார்.

“பிள்ளை  அங்கிருப்பதால்  பெற்றோர்  இருவருமே  சென்று காண  முடியும்”, என்றாரவர்.