மசீச: பக்காத்தான் மாநிலங்களில் மணம் செய்ய முடிவதில்லை; நிம்மதியாக சாகவும் முடிவதில்லை

tengமசீச,  சிலாங்கூரிலும்  பினாங்கிலும்  இஸ்லாமிய  அதிகாரிகளின்  நடவடிக்கைகளைச்  சாதகமாகப்  பயன்படுத்திக்கொண்டு  பக்காத்தான்  ரக்யாட்டைச்  சாடத்  தொடங்கியுள்ளது.

பினாங்கு  மசீச  துணைத் தலைவர்   டான்  தெக் செங்,  அவர்களின்  மாநிலங்களில்  முஸ்லிம்-அல்லாதாரை  ஒட்டுமொத்தமாக  ஒழித்துக்கட்டுவதுதான்  எதிரணியினரின்  நோக்கமா என்று  வினவியுள்ளார்.

“பக்காத்தான்  நிர்வாகத்தில்  மாநில  இஸ்லாமிய  சமயத்துறை  அதிகாரிகள்  முஸ்லிம்-அல்லாதாருக்குத்  தொடர்ந்து  தொல்லை  தருகிறார்கள்”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

பக்காத்தான்  ஆட்சியில், திருமணங்கள்  தடுத்து  நிறுத்தப்படுகின்றன. செத்தவர்களையும்  அடக்கம்  செய்ய  முடிவதில்லை  என  தெக்  செங்  கூறினார்.

“அம்மாநிலங்கள்  முஸ்லிம்- அல்லாதார்  வாழத்  தகுதியற்றவை  ஆகிவிட்டன”,  என்றாரவர்.