பெட்ரோல்மீது ஜிஎஸ்டி ; கடைசிநேர அதிரடி அறிவிப்பு செய்யப்படலாம்

petrolஅரசாங்கம் பெட்ரோல், டீசல்மீது  பொருள்,  சேவை  வரி )ஜிஎஸ்டி) விதிப்பது  பற்றி  தாமதித்து  அறிவிப்பு  செய்யலாம்  என  பிகேஆர்  கூறுகிறது.

இன்று  செய்தியாளர் கூட்டத்தில்  பேசிய  பிகேஆர்  வியூக இயக்குனர்  ரபிஸி  ரம்லியும்  கிளானா  ஜெயா  எம்பி  வொங்  சென்னும்,   பெட்ரோலும்  டீசலும்  ஜிஎஸ்டிக்கு  மிகப்  பெரிய  பங்களிப்பைச்  செய்யக்கூடியவை  என்பதால்  அவற்றுக்கு  வரி  விதிக்கும்  வாய்ப்பை  அரசாங்கம்  நிச்சயம்  விட்டுவிடாது  என்றனர்.

“பெட்ரோல்,  டீசல்மீதான  ஜிஎஸ்டி  மூலம்  அரசாங்கத்துக்கு  ரிம3 பில்லியன்  கூடுதல்  வருமானம்  கிடைக்கும். இது  மொத்த  ஜிஎஸ்டி  வருமானத்தில்  12விழுக்காட்டிலிருந்து  14விழுக்காடாகும்”, என ரபிஸி  கூறினார்.

நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான், அரசாங்கம்  பெட்ரோலுக்கும்  டீசலுக்கும்  வரி  விதிப்பது  பற்றி  இன்னும்  முடிவு  செய்யவில்லை  எனக்  கூறியதாக  அண்மையில்  அறிவிக்கப்பட்டிருந்தது.