பிஎன் எம்பி: ஒற்றுமையைக் கட்டாயப்படுத்தித் திணிக்கக் கூடாது, அது இயல்பாக வர வேண்டும்

unityசட்டம்போட்டு  ஒற்றுமையையும் இணக்கத்தையும் ஏற்படுத்த  நினைப்பது  மக்களைக்  குறிப்பிட்ட  ஒரு  சமயத்தைப்  பின்பற்றுமாறு  கட்டாயப்படுத்துவதற்கு  ஒப்பாகும்  என்கிறார்  பிஎன்னின்  பூலாய்  எம்பி  நூர்  ஜஸ்லான்  முகம்மட்.

நாடாளுமன்றத்தில் இன்று  பொதுக் கணக்குக்குழு  கூட்டத்துக்குத்  தலைமைதாங்கிய  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  அவர்,  அரசாங்கம்  தேசிய   ஒற்றுமைக்காக  சட்டம்  கொண்டு  வருவது  “அவசியமற்றது”  என்றார்.

தேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்றம், நிந்தனைச்  சட்டத்துக்குப்  பதில்  தேசிய  இணக்கச்  சட்டத்தை  வரைந்து  வருவது  பற்றி  நூர்  ஜஸ்லான்  எதிர்வினையாற்றினார்.

“(இணக்கநிலை)  மக்களிடம்  இயல்பாக  தோன்ற  வேண்டியது.   பல  ஆண்டுகளுக்குமுன்  இயல்பாக  இருந்தவற்றை  எல்லாம்  இன்று  சட்டம்போட்டு  கொண்டுவர வேண்டியுள்ளது. இதுதான்  இப்போதைய  பிரச்னை”,  என்றவர்  வருத்தப்பட்டார்.