ஹுடுட்டின் சாத்தியக்கூறுகளை ஆராய அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்ற சிலாங்கூர் பிஎன்னின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறிய சட்டமன்றத் தலைவர் ஹன்னா இயோ, அது அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படலாம் என்றார்.
எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு நான்கு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக ஹன்னா கூறினார்.
“நான்கில் மூன்றை ஏற்றுக்கொண்டேன். ஒன்றை நிகாகரித்தேன்.
“ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் ஹுடுட் மீதான தீர்மானமும் ஒன்று”, என்றாரவர்.
சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டம் அடுத்த திங்கள்கிழமை தொடங்குகிறது.
பி.என்.னின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. சட்டமன்றம் தொடங்குகின்ற போது அவர்களின் விளக்கங்கள் எப்படி இருக்கும் என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறோம்.
கிளந்தானில் ஹுடுத் சட்டம் கொண்டுவருவதை MCA – BN கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அதற்க்காக DAP யை தரக்குறைவாக பேசி வம்புக்கு இலுதுக்கொண்டிருகிறது . ஆனால் இப்போது சிலாங்கூரில் அதே சர்ச்சையை UMNO BN கொண்டுவந்துள்ளது . இதற்க்கு மானமுள்ள , ரோசக்கார MCA என்ன செய்யப்போகுது ? Tiong Lai – லாய் – லாய் !!
அருமையான அரசியல் சித்தாட்டம்.
நீங்கள் எதையாவது செய்து நாட்டைக் குட்டிச்சுவராக்குங்கள். ஆனால்… அவனவன் மதச்சட்டத்தை அவனவனோடு மாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள். மற்றவன்மீது திணிப்பதை நிறுத்துங்கள்! நான் பன்றி மாமிச சமையலை ஏற்றுக்கொள்வேன்; சாப்பிடுவேன்.அது என் விருப்பம், சுதந்திரம். இதில் தலையிட எவனுக்கும் உரிமை இல்லாததைப்போல மற்ற விஷயங்களிலும் எந்த மதசட்டமும் என்னைத் தொடக்கூடாது. அவ்வளவுதான்!
தேனீ போதும் மூ………….