ஜோகூர் சுல்தான்: மாநில விவகாரங்களில் தலையிட மாட்டேன்

sulஜோகூர்  சுல்தான், சுல்தான்  இப்ராகிம்  சுல்தான்  இஸ்கண்டார், மாநில நிர்வாகத்தில்  தாம்  தலையிடப்போவதில்லை  என்கிறார்.

ஜோகூர்  வீட்டுவசதி, சொத்து  வாரிய  சட்டவரைவுகூட  மந்திரி  புசாரின்  ஆலோசனை பெறுவதைத்தான்  வலியுறுத்துகிறது  என்று  சுல்தான்  நியு  ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸு(என்எஸ்டி)க்கு  வழங்கிய  நேர்காணலில்  கூறினார்.

அந்தச்  சட்டவரைவுப்படி, அவ்வாரிய  உறுப்பினர்கள்  நால்வரை  நியமிக்கும்  அதிகாரம்  சுல்தானுக்கு  உண்டு.  ஆனால்,  மந்திரி  புசாரின்  ஆலோசனை கேட்டுத்தான்  அவர்  அந்நியமனங்களைச்  செய்ய  முடியும்.

“தலையீடு  என்பது  இல்லை. இதை  எம்  குடிமக்கள்  புரிந்துகொள்ள  வேண்டும். சட்டவரைவுமீது  அவர்களுக்கு  திருப்தி  உண்டாக  வேண்டும்”,  என்று  சுல்தான்  கூறினார்.

சட்டவரைவுக்கு  எதிர்ப்பு  அடங்கும்வரை  சுல்தான்  அதில்  கையொப்பம் இடமாட்டார்.

பொதுமக்கள்  அதை  நன்கு  விளங்கிக்கொள்ள  சட்டமன்ற  உறுப்பினர்கள்  விளக்கக்  கூட்டங்களை  நடத்துவர்  என்றும்  என்எஸ்டி செய்தி  கூறியது.