பிகேஆர்: அரசாங்கம் யுஐடிஎம் வளாகங்கள் அமைக்க 5மடங்கு அதிகமாகச் செலவிடுகிறது

uitmஅரசாங்கம், ஆறு  மாநிலங்களில் ஆறு மாரா  தொழில்நுட்பப்  பல்கலைக்கழகங்களைக் கட்டுவதற்கு  முதலில் மதிப்பிட்டதைவிட  ஐந்து  மடங்கு  அதிகமாகச்  செலவிடுகிறது  என  பிகேஆர்  கூறியுள்ளது.

ஆறு  வளாகங்களைக்  கட்டுவதற்கு  ரிம1.8 பில்லியன்  செலவாகும்  என்பது  முதலில்  செய்யப்பட்ட  மதிப்பீடு. ஆனால், அவற்றைக்  கட்டி, பராமரிக்கும்  பொறுப்பு  தனியார்  நிறுவனங்களிடம்  ஒப்படைக்கப்பட்டதை  அடுத்து  கட்டுமானச்  செலவு  ரிம8.6 பில்லியனாக  எகிறிவிட்டது  என  பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி ரம்லி  தெரிவித்துள்ளார்.

அந்நிறுவனங்களின்  உரிமையாளர்கள்  “அம்னோவுக்கு  வேண்டபட்டவர்கள்”  என்ற  ரபிஸி  அவர்களைப் பற்றி  மேலும்  பல  தகவல்களை  அடுத்த  வாரம்  அம்பலப்படுத்தப்போவதாகச்  சொன்னார்.

“இப்போது  மக்களுக்குப்  புரிந்திருக்கும்,  அம்னோ  எப்போதும்  சொல்லிக்  கொண்டிருப்பதுபோல் யுஐடிஎம்-மைப்  பாதுகாக்கவில்லை  என்று. அது  யுஐடிஎம்  பெயரைச்  சொல்லி  வேண்டப்பட்டவர்களைப்  பணக்காரர்களாக்கிக்   கொண்டிருக்கிறது”, என்று  ரபிஸி  கூறினார்.