தியோ முஸ்லிம் அல்லர்: அவரது சடலத்தைத் திருப்பிக் கொடுக்க நிதிமன்றம் உத்தரவு

bodyதியோ  செங்  செங் முஸ்லிம்  அல்ல  என்று  பினாங்கு  ஷியாரியா  நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

“சாட்சிகளின்  வாக்குமூலங்கள்  அவர்  இஸ்லாத்தைக்  கடைப்பிடிக்கவில்லை  என்பதைக்  காண்பிக்கின்றன”, என  நீதிபதி  ஸயிம்  முகம்மட்  யுடிம்  தீர்ப்பில்  குறிப்பிட்டார்.

எனவே,  அவரது  சடலத்தை  செங்  செங்-கின்  குடும்பத்தாரிடம்  ஒப்படைக்குமாறு  பினாங்கு  இஸ்லாமிய  விவகார  மன்ற(எம்ஏஐபிபி) த்துக்கும்  பினாங்கு  பொது  மருத்துவமனைக்கும்  அவர்  உத்தரவிட்டார்.

எம்ஏஐபிபி  வழக்குரைஞர்  வான்  பரிதுல்ஹாடி  முகம்மட்  யூசுப்,  மதம் மாற  1997-இல்  விண்ணப்பம்  செய்திருந்த  செங்  செங்  அதன்பின்னர்  ஒரு  முஸ்லிமாகத்தான்  வாழ்ந்தார்  என்பதை நிரூபிக்க  எம்ஏஐபிபி  தவறிவிட்டது  என்றார்.