சமய வரம்புகளை மீறாதீர்கள்: பேராக் சுல்தான் அறிவுறுத்து

nasrin shahபேராக்  சுல்தானாக  அரியணை  அமர்ந்துள்ள  சுல்தான் நஸ்ரின் ஷா, தம்  முதலாவது  அரசவுரையில்,  இன, சமய  பிரச்னைகளால்  தோன்றியுள்ள  பதற்றநிலையைத்  தொட்டுப்  பேசியுள்ளார்.

மலேசியர்கள்  ஒருவர்  மற்றவரை  மதிக்க  வேண்டும்  என்றும்  சமய  எல்லைகளை  மீறக் கூடாது  என்றும்  அவர்  கேட்டுக்கொண்டார்.

பல  இனங்களை, சமயங்களை,  பண்பாடுகளைக்  கொண்ட  நாட்டில்  இணக்கமான  வாழ்க்கை  என்பது  ஒரு  கூட்டு  முயற்சி  ஆகும்  என்பதை  சுல்தான்  நினைவுறுத்தினார்.

“முஸ்லிம்  அமைப்புகளும்  இஸ்லாமிய  விவகாரத்துக்குப்  பொறுப்பான  அமைப்புகளும்  மற்ற  சமயத்தவரின்  உணர்வுகளை  மதிக்க  வேண்டும்.

“அதேவேளை,  முஸ்லிம்-அல்லாதார் முஸ்லிம்களின்  உணர்வுகளுக்கு  மதிப்பளிக்க  வேண்டும்”,  என்றவர்  வலியுறுத்தியதாக  பெர்னாமா  கூறுகிறது.