‘குழந்தைப் பராமரிப்புச் சர்ச்சைகளில் நீதிமன்றத்தைவிட நடுவர் மன்றமே மேலானது’

zainalஇனங்களுக்கிடையில்  குழந்தை  பராமரிப்பு  தொடர்பில்  எழும்  பிரச்னைகளுக்குத்  தீர்வுகாண  மூவரடங்கிய  நடுவர்  மன்றம்  அமைப்பதே  நல்லது  என   மலேசிய  முஸ்லிம்  வழக்குரைஞர்  சங்கத்  தலைவர்  சைனுல்  ரிஜால்  அபு  பக்கார்  பரிந்துரைத்துள்ளார்.

அவ்வழக்குகளை  ஷியாரியா  நீதிமன்றத்துக்கோ, சிவில்  உயர்  நீதிமன்றத்துக்கோ  கொண்டுசெல்வதைவிட  இது  மேலானது  என்றாரவர்.

முஸ்லில்-அல்லாதார்  ஷியாரியா  நீதிமன்றத்துக்குச்  செல்ல  விரும்பமாட்டார்கள். மதம் மாறிய  தாயோ  தந்தையோ  சிவில்  நீதிமன்றம்  செல்ல  மறுப்பார்கள். தங்களுக்கு  நியாயம்  கிடைக்காது  என்று  நினைப்புத்தான்  காரணம்  என்றவர்  சொன்னார்.

‘அந்நடுவர்  மன்றத்தில்  சிவில்  உயர் நீதிமன்ற  நீதிபதி  ஒருவரும்  ஷியாரியா  உயர்  நீதிமன்ற  நீதிபதி  ஒருவரும்  மாநில  ஆட்சியாளரால்  நியமிக்கப்படும்  ஒருவரும்  இடம்பெற்றிருக்க  வேண்டும்  என்றும்  முன்மொழிகிறேன்”,  என  சைனுல்  கூறினார்.