தாமான் தேசாவில், கைவிடப்பட்ட நிலையில் ஒரு பள்ளி

skதாமான்  தேசாவில்,  பத்தாண்டுகளாகக்  கைவிடப்பட்டுக்  கிடக்கும்  எஸ்கே  டானாவ்  பெர்டானா, பார்ப்பதற்கே  அருவருப்பாகக்  காட்சியளிக்கிறது. பள்ளியின்  நிலை  கண்டு  அங்குள்ள  குடியிருப்பாளர்கள்  கொதித்துப்  போயுள்ளனர்.

“கல்வி  அமைச்சு  மெதுவாக  செயல்படுகிறது. இந்த  இடம்   கண்ணறாவியாக  காட்சியளிப்பதுடன்   குப்பைமேடாகவும்  போதைப்  பித்தர்களின்  வசிப்பிடமாகவும்,  கொசுக்கள்  வளருமிடமாகவும்  மாறியுள்ளது”, என  சீபூத்தே  எம்பி  தெரேசா  கொக்  செய்தியாளர்  கூட்டமொன்றில் கூறினார்.

பள்ளியின்  நிலை  குறித்து  அவர்,  நாடாளுமன்றத்தில்  கல்வி   அமைச்சர்  முகைதின்  யாசினிடம்  கேள்வி  எழுப்பியதுமுண்டு.  ஆனால்,  தெளிவான  பதில்  கிடைக்கவில்லை.

“பல  தடவை   கேட்டு  விட்டேன்.  அமைச்சு  கவலைப்படுவதாக தெரியவில்லை”,  என  கொக்  குறிப்பிட்டார்.