சிலாங்கூர் இஸ்லாமிய மன்றம்(மயிஸ்) கடந்த ஜனவரில் மலேசிய பைபிள் கழக(பிஎஸ்எம்)த்தில் கைப்பற்றப்பட்ட பைபிள்களைத் திருப்பிக் கொடுக்காது.
அவ்வழக்கைக் கைவிடுவது என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்லின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என மயிஸ், நேற்று நடந்த ஒரு சிறப்புக் கூட்டத்தில் கூறியது.
“வழக்கைத் தொடராததற்குச் சட்டத்துறை தலைவர் கூறும் காரணம் முஸ்லிம்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணும்”, என அது அறிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், கைப்பற்றப்பட்ட பைபிள்களைத் திருப்பிக் கொடுக்குமாறு மாநில ஆட்சிமன்றம் விடுத்துள்ள உத்தரவிலும் தனக்கு உடன்பாடில்லை என மயிஸ் கூறியது.
இதெல்லாம் மைசுக்கு யார் மூலம் கிடைக்கும் உத்வேகம் என்பது எங்களுக்குத் தெரியாத என்ன?. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட சமய ரீதியின் அடிப்படையில் குற்றவியல் சட்டம் இயற்றினால் இந்நாடு கெட்டு குட்டிச் சுவராகி விடும் என்று மன்றாடியது. இது புரியாமல் ஒரு சிலர் மனம் போன போக்கில் ஹுடுத் சட்டம் வேண்டும் என்று இந்நாட்டின் சட்ட நிலைமைகளை அறியாமல் ஆதரவு கரம் நீட்டினர். இதுக்கே இப்படின்னா இன்னும் குற்றவியல் சட்டம் அவர்கள் கையில் போனால் குரங்கு கையில் பூமாலை கிடச்ச மாதிரிதான்.
ஆசிரியர் அவர்களுக்கு, “ஜைசுக்கு” என்று குறிப்பிட்ட வார்த்தையை “மைசுக்கு” என்று திருத்தி விடவும். நன்றி.
இந்த இரண்டு இஸ்லாமிய கழகமும் மன்றமும் எவரின் மேல்பார்வையின் கீழ் அமைந்துள்ளது என்பதை அறிவீர்… இவர்கள் குடுமி சும்மா ஆடாது!!!!!