நஜிப், ரோஸ்மாமீது பாலா குடும்பத்தினர் வழக்கு

amerikNajib&Roasmahகாலஞ்சென்ற  (தனித் துப்பறிவாளர்) பி.பாலசுப்ரமணியத்தின்  குடும்பத்தினர்,  ஐந்தாண்டுகள்   நாடுகடந்து வாழ வேண்டிய  கட்டாயத்துக்கு  ஆளானதற்கு  இழப்பீடு  கேட்டு  பிரதமர்  நஜிப் ரசாக், அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  உள்பட  ஒன்பதின்மர்மீது  வழக்கு  தொடுத்துள்ளனர்.

“புதிய  ஆதாரங்கள்”  கிடைத்ததன்  அடிப்படையில்  இந்த  வழக்கைத்  தொடுத்திருப்பதாக  அக்குடும்பத்தின் வழக்குரைஞர்  அமெரிக்  சித்து  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

எதிர்வாதிகளாகக்  குறிப்பிடப்பட்டிருப்போரில்  நஜிப்பின்  சகோதரர்  நசிம்  ரசாக்,  வழக்குரைஞர்  சிசில்  எப்ராஹெம், வணிகர்  தீபக்  ஜெய்கிஷன் முதலியோரும்  இடம்பெற்றுள்ளனர்.