அபிம்: நஜிப்பின் கருத்து ஷியாரியா நீதிமன்றத்தை அவமதிக்கிறது

abimவெவ்வேறு  சமயத்தவர்  சம்பந்தப்பட்ட  பராமரிப்புச்  சர்ச்சைகளைக்  கூட்டரசு  நீதிமன்றத்துக்குக்  கொண்டுசெல்ல  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பரிந்துரைத்திருப்பது  ஷியாரியா  நீதிமன்றத்தை  இழிவுபடுத்துவதாகும்  என  மலேசிய  இஸ்லாமிய  இளைஞர்  இயக்கம் (அபிம்) குற்றம்  சாட்டியுள்ளது.

“கூட்டரசு  அரசமைப்பின்  பகுதி 121 (1ஏ), இஸ்லாம்  சம்பந்தப்பட்ட  விவகாரங்களில்  தீர்ப்பளிக்கும்   முழு அதிகாரத்தை  ஷியாரியா  நீதிமன்றத்துக்குக்  கொடுக்கிறது”, என அபிம்  ஓர்  அறிக்கையில்  கூறியது.

ஆனால், நஜிப்பின்  கருத்து அந்தச் சட்டவிதியை நிலைநாட்டுவதில் அரசாங்கத்துக்கு  உண்மையில்  அக்கறை  இல்லை  என்பது  போன்ற  தோற்றத்தை  ஏற்படுத்துகிறது  எனக்  கூறிய  அவ்வியக்கம்,  அதே   வேகத்தில்  ஷியாரியா, சிவில்  சட்டங்களுக்கிடையில்   “இணக்கநிலை”  காண ஒரு  புதிய  அணுகுமுறை  தேவை  என்றும் கூறியது.