ஜிபிஎம்: ஐஜிபி பதவி விலக வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும்

 

gbm letterhead w tamil CLEANஅரசியல் கட்சி மற்றும் அரசு சார்பற்ற மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பு நீதிமன்ற உத்தரவுக்கு பணிய மறுத்துள்ள மலேசிய போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாக்கார் உடனடியாக பதிவு விலக வேண்டும் அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

“ஐஜிபி இரு குழந்தைகள் பராமரிப்பு சம்பந்தமாக இரு உயர்நீதிமன்றங்கள் விடுத்துள்ள உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்றே மறுத்துள்ளார். அது ஆட்சிக்கு எதிராக கலகம் செய்வதற்கு ஒப்பாகும். காலிட் ராஜினாமா செய்ய மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை போலீஸ் படை ஆணையம் முடுக்கிவிட வேண்டும்”, என்று ஜிபிஎம் கோருகிறது.

பிரதமரின் அறிக்கைக்கு கண்டனம்

ஜிபியின் அறிக்கையில் மதங்கிடையிலான குழந்தை பராமரிப்பு வழக்குகள் பெடரல் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் IGP to goஎன்று பிரதமர் நஜிப் கூறியிருப்பது ஐஜிபிஎன் கொள்கையற்ற நடத்தைக்கு சம்மதம் தருவதாக இருக்கிறது என்றும், பிரதமர் நஜிப் அளித்துள்ள ஆலோசனை உயர்நீதிமன்றங்களுக்கு அவற்றின் உத்தரவுகளை போலீசார் மதிப்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரம் இல்லை என்று கூறும் பிரகடனத்திற்கு நிகரானதாக இருக்கிறது என்றும் கூறியதோடு அதற்காக பிரதமர் நஜிப்பை கண்டிப்பதாகவும் ஜிபிஎம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமரின் அறிக்கை நீதிமன்றங்களை அவமதிப்பதாகவும் இருக்கிறது அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

najib“பிரதமர் நஜிப்பின் அறிக்கை உயர்நீதிமன்றங்கள் மற்றும் இதர நீதிமன்றங்களை, பெடரல் நீதிமன்றத்தை தவிர, மட்டும் அவமானப்படுத்துவதாக இல்லை. பாதுகாப்பு படைகளில் கீழ்ப்படிய மறுத்தலுக்கு ஊக்குவிப்பு அளிப்பதின் வழி அது ஜனநாயகத்தையும் சிவிலியன் ஆட்சியையும் வலிமையற்றதாக்குகிறது”, என்று ஜிபிஎம் பிரதமர் நஜிப்புக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

ஜனநாயகத்தில், மக்களால் தேர்வு செய்யப்படாத அமைப்புகள், அதாவது இராணுவம் மற்றும் போலீஸ் படை போன்றவை, முற்றிலுமாக சிவிலியன் அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு, நீதித்துறையின் அதிகாரத்திற்கும், உட்பட்டு இருக்க வேண்டும் என்று ஜிபிஎம் வலியுறுத்துகிறது. இது சாதாரண மக்கள் புரியும் நீதிமன்ற அவமதிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதோடு மிகவும் கடுமையானதுமாகும் என்பதை ஜிபிஎம் சுட்டிக் காட்டியுள்ளது.

மலேசியா குழப்பத்தில் மூழ்கிவிடும்

எந்த ஓர் அடிப்படையிலும் இராணுவமும் போலீசும் உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுப்பதற்கு இடமேயில்லை. சிவிலியன் அரசின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் எந்த ஓர் இராணுவ அல்லது போலீஸ் படையின் உறுப்பினரும் இராஜினாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும். அவர்களுக்கு தங்களுடைய சொந்த உசிதப்படி செயல்படுவதற்கான சுதந்திரம் கிடையாது என்பதை ஜிபிஎம் அறிக்கை வற்புறுத்திக் கூறுகிறது.

“மலேசியர்கள் வெவ்வேறான கருத்துகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், சட்ட ஆளுமை என்ற கோட்பாடு நிலைநிறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். நீதித்துறை அல்லது ஆட்சித்துறையின் உத்தரவை நிறைவேற்றுவதா என்பதை ஒவ்வொரு போலீஸ் அதிகாரியும் அவருடைய சொந்த விருப்பதற்கு ஏற்ப முடிவு செய்யும் நிலை ஏற்பட்டால் மலேசியா ஒரு பெரும் குழப்பத்தில் மூழ்கிவிடும்” என்று ஜிபிஎம் கருதுகிறது.

ஒருவேளை, ஈப்போ நீதிமன்றம் அதன் உத்தரவை 30 நாள்களுக்குள் போலீஸ் அமல்படுத்த வேண்டும் என்று விடுத்துள்ள மிக அண்மைய உத்தரவுக்கு ஏற்ப ஐஜிபி காலிட் அபு பாக்கார் இப்போது ஈப்போ நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தினாலும், இதற்கு முன்னதாக உத்தரவுக்கு கீழ்ப்படிய அவர் மறுத்தது மிகக் கடுமையான தவறு என்றாகிவிட்டதால், அவர் இப்பதவில் இருப்பதற்கு முற்றிலும் அருகதையற்றவராகி விட்டார்.

மேலும், நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்த குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு வழியாக இவ்வழக்குகளில் சிக்கியுள்ள குழந்தைகளை குழந்தை பராமரிப்பு மையத்தில் சேர்த்து விடலாம் என்ற ஐஜிபியின் முன்மொழிதல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும் என்று ஜிபிஎம் கருதுகிறது. இது ஓர் இராணுவ தளபதி அவரது தற்காப்பு அமைச்சர் முதலில் விடுத்த உத்தரவுக்கு1-hamidi1 சவால் விடுத்து விட்டு அமைச்சருக்கு இராணுவத்தின் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை கூறுவதற்கு ஒப்பாகும் என்று ஜிபிஎம் மேலும் கூறுகிறது.

ஐஜிபி கீழ்ப்படிய மறுத்த உடனே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதால் உள்துறை அமைச்சரும், பிரதமரும் அவர்களின் கடமையிலிருந்து தவறிவிட்டனர் என்பது ஜிபிஎம்மின் கருத்தாகும். ஐஜிபி பதவி விலக மறுத்தால், போலீஸ் படை ஆணையம் காலிட் அபு பாக்கரை பதவியிலிருந்து அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சரும் பிரதமரும் முன்வர வேண்டும் என்று ஜிபிஎம் அதன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

 

 

 

TAGS: