அரசமைப்பில் இஸ்லாத்துக்குச் சிறப்பான இடமளிக்கப்பட்டிருப்பதால் மலேசியா ஒரு சமயச் சார்பற்ற நாடல்ல என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
பிரதமர்துறை அமைச்சர் ஜமிர் கீர் பஹாரோம், கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் ஒஸ்கார் லிங் சாய் இயு-வுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.
ஷியாரியா நீதிமன்றத்தின் பார்வையில் உள்ள விவகாரங்களை விசாரிக்கும் அதிகாரம் சிவில் நீதிமன்றத்துக்கு இல்லை என்றும் ஜமில் வலியுறுத்தினார்.
வாங்கிக் கட்டிக்க இந்த மூடன் வாயைத் திறந்துட்டான்!!!! அரசமைப்பை நன்கு உணராதவர்கள் இப்படித்தான் ஊளைவிடுவார்கள்… இந்நாட்டை எப்படியாவது ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்ய எப்படியெல்லாம் நடிக்கிறார்கள் இந்த மூடர்கள்!!!!
நல்ல திறமையான அமைச்சர் என்று அனைவரையும் குறிப்பாக மலாய்காரர்களை நம்பவைக்க இப்படியெல்லாம் அரசியல் நாடகமாடுகிறார்கள் இது போன்ற அரசியல்வாதிகள், அங்கு அவர்களது நிலைத்தன்மையை உறுதிபடுத்த இது போன்ற செய்திகள் தான் இவர்களுக்கு கிடைத்திருக்கும் ஆயுதம். அரசாங்கம் எப்படி எல்லாம் பொது மக்களின் கவனத்தை திசை திருப்ப முடியுமோ அந்த அளவுக்கும் அதிகமாகவே சட்டத்தை அவர்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுகிறார்கள். அரசியல் சாசனத்தை இப்பொழுது யாருப் மதிப்பதில்லை, அதில் இந்த அறிக்கையும் ஒன்று.
தற்சமயம், பாரிசானை சேர்ந்த அனைத்து மலாய்க்காரர்களும் தங்கள் இனத்தை பற்றியும், மதத்தைப் பற்றியும் பேச முற்பட்டுவிட்டார்கள். தற்போதைய ஆட்சி மாறாமலிருக்க, இந்த ஒரே இனத்திடம் ஏதாவது கூறி, குழப்பி, ஒன்றுப்படுத்தினாலோழிய, அவர்கள் ஆட்சியில் நீடிக்க முடியாது என தெரிந்து வைத்துள்ளார்கள். அதனால், மே 13 சம்பவத்தை ஞாபகப் படுத்துமளவுக்குப் போய் விட்டார்கள். குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கும் நமது நாடு, விரைவில் நாசமாகிவிடும் என்பது கண்கூடாத் தெரிகிறது.
மதத்தை பற்றி கூறினால் எல்லோரும் கட்டு படுவார்கள்
அதனால் உலகில் உள்ள எல்லா நாடுகளும் மதத்தை ஒரு
கருவியாக பயன்படுத்துவது ஆச்சரியம் இல்லை நைனா .
“ஷியாரியா நீதிமன்றத்தின் பார்வையில் உள்ள விவகாரங்களை விசாரிக்கும் அதிகாரம் சிவில் நீதிமன்றத்துக்கு இல்லை” என்று சொல்லத் தெரிந்த உமக்கு அதே மாதிரி சிவில் சட்டத்தின் வழி திருமணம் புரிந்தவருக்கு சரியா நீதிமன்றத்தில் விவாகரத்து கொடுக்க எந்த சட்டம் வழி வகுக்க முடியும் என்றும் சொல்லுங்களேன் மக்கு மந்திரி. போங்கடா நீங்களும் உங்க சட்டமும்.
இவனெல்லாம் பகுத்தறிவு இல்லா மட …-என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது.
நேத்து முளைச்ச காளான் ivan … முனைவர் பட்டபடிப்பு …. சமம் பற்றி !
மேஜராக பதவிவகித்து மக்களுக்கு சேவை செய்ய வந்த ஆளு இப்போ போட குண்ட பாரு ! முதலில் இஸ்லாம் சரியா கோர்ட் எப்போ நடைமுறைக்கு வந்தது எப்படி வந்தது என்பதை அறிந்துகொண்டு பேச வேண்டும் மாறாக மண்ணில் கழுத்தை புதைத்துக்கொண்டு உண்மை எதுவென்று அறியாமல் கண் மூடிதனமாக பேசகூடாது … எவனோட லட்சணம் இப்போ மக்களுக்கு நன்றாக தெரியும் … ஆப்பு காத்திருக்கு இவன் போன்ற ….. ம ….பிடித்த அரசியல் வாதிகளுக்கு …
நேத்து முளைச்ச காளான் இவன் .. முனைவர் பட்டபடிப்பு …. சமம் பற்றி !மேஜராக பதவிவகித்து மக்களுக்கு சேவை செய்ய வந்த ஆளு.. செனடர் பதவி வேறு ! இப்போ போட குண்ட பாரு ! முதலில் இஸ்லாம் சரியா கோர்ட் எப்போ நடைமுறைக்கு வந்தது எப்படி வந்தது என்பதை அறிந்துகொண்டு பேச வேண்டும் மாறாக மண்ணில் கழுத்தை புதைத்துக்கொண்டு உண்மை எதுவென்று அறியாமல் கண் மூடிதனமாக பேசகூடாது … இவனோட லட்சணம் இப்போ மக்களுக்கு நன்றாக தெரியும் … ஆப்பு காத்திருக்கு இவன் போன்ற ….. ம ….பிடித்த அரசியல் வாதிகளுக்கு …பதிலடிகொடுக்க
நான்தான் அப்போதிருந்தே சொல்கின்றேனே—முஸ்லிம்/மலாய் காரங்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம்- இவங்கள் சொல்லும் கழிவறை தத்துவங்கள் எல்லாம் அவனிடமிருந்து வந்தவை -யாருக்கும் கேள்வி கேட்க உரிமைகிடையாது. நமது வீரம் எல்லாம் தமிழ் திரை படங்களில் மட்டும் தான்.
எல்லாம் துங்குவை நம்பியதன் விளைவு- அதிலும் 1969 திற்கு பிறகு- MIC MCA வாழை கால்களுக்கு இடையில் வைத்திருந்ததின் விளைவு. அன்றிலிருந்து ஆரம்பித்தது ஏழரை -இன்று அது நம்மை அதல பாதாள நிலைக்கு கொண்டு சென்று விட்டது. பல திறமைசாலிகள் 1969 திற்கு பின் காணாமல் போய்விட்டனர்– சீனர்கள் வியாபாரத்தில் இருந்ததால் அவர்கள் நிலை தரமுடன் இருக்கின்றது– வேலையையே நம்பி இருந்த நம்மவர்கள் இன்று அடிமட்டம்—எல்லா வேலைகளும் மலாய்க்காரன் களுக்கே- நம்மவர்கள் அடிதடியிலும் நம்மை நாமே புதைத்து கொண்டும் இருக்கிறோம்.
PON RANGAN wrote on 17 June, 2014, 15:21
அப்படியானால் மலேசியாவில் பிறந்த நான் என்ன சமயத்துக்கு சொந்தக்காரரன் என்று அந்த அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்?