மலேசியா சமய சார்பற்ற நாடல்ல

 

jamilமலேசிய அரசமைப்புச் சட்டத்தில் இஸ்லாத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிலை காரணமாக மலேசியா ஒரு சமய சார்பர்ற நாடல்ல என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் ஓஸ்கார் லிங் சாய் இயு (டிஎபி-சிபு) எழுப்பி இருந்த கேள்விக்கு கடந்த வாரம் எழுத்து மூலம் பதில் அளித்த பிரதமர்துறை அமைச்சர் ஜமீல் கிர் பஹாரும் இவ்வாறு கூறியுள்ளார்.

ஷரியா நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட விவகாரங்கள் மீது சிவில் நீதிமன்றத்திற்கு நீதிபரிபாலன அதிகாரம் கிடையாது என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்றும் ஜமீல் வலியுறுத்தியுள்ளார்.