தெனாகா நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி) தொழிற்சங்கங்கள் நான்கும், முன்எப்போதுமில்லாத வகையில் ஒன்றுசேர்ந்து ஒய்டிஎல் கார்ப்பரேஷனுடன் உள்ள உறவுகளை டிஎன்பி துண்டித்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன.
ஒய்டிஎல்-இடமிருந்து மின்சாரம் வாங்கும் உடன்பாடு 2015-இல் முடிவுக்கு வரும்போது டிஎன்பி அதைப் புதுப்பிக்கக் கூடாது என்று அவை கூறின. பாசிர் கூடாங்கில் ஒய்டிஎல்-லுடன் சேர்ந்து மின் உற்பத்தி ஆலை அமைக்கும் திட்டத்தையும் நிறுத்த வேண்டும்.
“ஒய்டிலுக்கு மின் உற்பத்தி திட்டம் எதுவும் கொடுக்கப்படக் கூடாது”, என டிஎன்பி இளநிலை அதிகாரிகள் சங்கத் தலைவர் முகம்மட் ரோஸ்லி மஜித் கூறினார்.
இன்று 500 தொழிலாளர்களுடன் டிஎன்பி தலைமையகத்துக்கு ஊர்வலமாக சென்று டிஎன்பி தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான அஸ்மான் முகம்மட்டிடம் 4-பக்க மகஜர் ஒன்றைக் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
வேண்டியவர்களை வளர்க்க அரசாங்க திட்டத்தில், பழிகடாவாவது பொது மக்கள் தானே.