முன்னாள் ஈயக் குட்டைகளிலிருந்து எடுக்கப்படும் நீர் பாதுகாப்பானது என்றால் சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர்கள் அதை அருந்திக் காட்டுவார்களா என ஒரு என்ஜிஓ சவால் விடுத்துள்ளது.
ஈயக் குட்டைகளிலிருந்து எடுக்கப்பட்டும் நீரில் உலோகக் கலவை அதிகமிருக்கலாம் என்பதால் அது குடிப்பதற்குப் பாதுகாப்பானதல்ல என்று கூறப்படுவதை அடுத்து ஊழலையும் வேண்டப்பட்டவர்களுக்குச் சலுகை அளிப்பதையும் எதிர்க்கும் மையம் (சி4) இவ்வாறு சவால் விடுத்துள்ளது.
“சிலாங்கூர் மக்கள் குடிநீர் 100 விழுக்காடு பாதுகாப்பானதுதான் என்று எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?”, என சி4 இயக்குனர் சிந்தியா கேப்ரியல் ஒர் அறிக்கையில் வினவினார்.
இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளைத் தெரியப்படுத்தலாம். அதில் ஒளிவுமறைவு இருத்தல் கூடாது.
“அல்லது அதையும்விட, ஒரு பொது நிகழ்வை ஏற்பாடு செய்து அதில் ஐயப்பாடுகளைத் தீர்த்துவைக்க சிலாங்கூர் ஆட்சிமன்றத்தினர் குடிநீர் மாதிரிகளை அருந்திக் காட்டுவது இன்னும் நல்லது”, என்றாரவர்.
இத்றகு பதிலாக பூமிக்கடியில் உள்ள நீரைப் பயன்படுத்தலாமே.
இதற்கு நமது களங் நாடாளுமன்ற உறுப்பினர் YB சார்லஸ் சந்தியாகோ பதில் கூறுவார் காரணம் அவர் தண்ணீர் துறையில் வல்லவர் என்று கேள்வி பட்டோம் நாங்கள் 30ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பததாண்டுகள்
குட்டை அதாவது முன்னாள் ஈயக்குட்டை தண்ணீரில் தான் வாழ்தோம்.இன்னும் உயிரோடுதான் உள்ளோம்.ஈயகுட்டையில் மீன்கள், ஆமைகள், முதலை, பாம்புகள் எல்லாம் வாழ்ந்தது பாம்பை தவிர எலாதையும் சாப்பிட்டும் உள்ளோம். இதெல்லாம் எந்த கணக்கு ?
இதை என் சி A சிந்தியா காப்ரியல் விளக்க வேண்டும். உங்கள் கூற்று படி ஓடும் நீர் ஓகே ..தங்கு நீரில் உலோக களவை என்பது மினரல் என்பது என்று நினைக்கிறேன். பைப்புகளில் வரும் நீரில் மினரல் இல்லை என்ரீர்களா? மஞ்சள் நிறத்தில் சேரும் துரு தண்ணீரும் வருதே அவையாவும் என்ன? சரியா சவால்தான் நன்றி!