ஜிஎல்சிகளின் எண்ணிக்கை அதிகம், அவை கொண்டுவரும் வருமானம் குறைவு

nurஅரசாங்கம், அரசுதொடர்பு  நிறுவனங்களை  மறுஆய்வு  செய்ய  வேண்டும்  என்று  பொதுக்  கணக்காய்வுக்  குழுத்(பிஏசி)  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  கேட்டுக்கொண்டிருக்கிறார். அவற்றில் பல  எந்த  வருமானத்தையும்  கொண்டுவருவதில்லை.

“ஒரு வேலையைச்  செய்ய  ஒரு  நிறுவனமே  போதும்  என்கிறபோது  இரண்டு  நிறுவனங்கள்  எதற்கு?”, என  நூர்  ஜஸ்லான்  வினவினார்.

இன்று வெளியிடப்பட்ட  2013,  தலைமைக்  கணக்காய்வாளர்  அறிக்கை பல  ஜிஎல்சிகளில்  நிர்வாகம் முறையாக  இல்லை  என்று  குற்றஞ்சாட்டி  உள்ளதை  அடுத்து  நூர்  ஜஸ்லான்  இவ்விவகாரத்தை  எழுப்பினார்.