எச்சரிக்கை: உங்கள் பேச்சை ஒட்டுக் கேட்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு உண்டு

liewமலேசிய  குடிமக்களின்  தொலைபேசி  அழைப்புகளை  ஒட்டுக்கேட்கும்  அதிகாரம்  அரசாங்கத்துக்கு  உண்டு  என்கிறார்  பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி.

அஞ்சல்வழியும்   தொலைத்தொடர்புக்  கருவிகள்  வழியும் நடைபெறும்  செய்தி  பரிமாற்றங்களையும்  உரையாடல்களையும்  இடைமறிக்கும்  அதிகாரம்  அதிகாரிகளுக்கு  உண்டு  என்றாரவர்.

5 சட்டங்கள்  அந்த  அதிகாரத்தை  வழங்குவதாக  அவர்  சொன்னார்.

குளுவாங்  எம்பி  லியு  சிங்  தொங்குக்கு  எழுத்து  வடிவில்  வழங்கிய  பதிலில்  நன்சி  இதைத்  தெரிவித்தார்.

“2009-க்குப்  பிறகு  அரசியல்வாதிகளின்  உரையாடல்கள்  இடைமறித்துக்  கேட்கப்பட்டதில்லை”, எனவும்  நன்சி  கூறினார்.

இந்தப்  பதில்  தெளிவாக  இல்லை  என்று  லியு  நினைக்கிறார்.

“அப்படியானால்  2009-க்கு  முன்னர்  தொலைபேசிகள்  ஒட்டுக்  கேட்கப்பட்டனவா? 1998-க்கும்  2009-க்குமிடையில்  நடந்தது  என்ன?”, என   அவர்  அறிந்துகொள்ள  விரும்புகிறார்.