கம்போங் பாகான் ஆஜாமில், மேம்பாட்டாளரால் குடியிருக்கும் இடத்தைவிட்டு வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள சுமார் 70 பேர், அதற்கெதிராக இன்று கண்டனக் கூட்டமொன்றை நடத்தினர்.
அந்த இடத்தைக் காலிசெய்யும்படி கடந்த ஆண்டு நவம்பரில் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டது.
பாகான் ஆஜாம் கம்போங் முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது.
“எங்களுக்கு முறையான இழப்பீடு அதாவது பதிலுக்கு வீடு கொடுக்க வேண்டும், அப்போதுதான் வெளியேற முடியும்”, எனக் குடியிருப்பாளர்களின் பேச்சாளர் வொங் செக் லீ கூறினார்.
“ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரிம7,000-இலிருந்து ரிம25,000 வரைதான் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். அது போதாது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கிறோம்.
“எங்கள் முன்னோர்கள் வீடு கட்டுவதற்கான நிலத்தை பணம்கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். அதனால் எங்களை எளிதாக வெளியேற்ற முடியாது”, என்றாரவர்.
எப்படியாவது மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். தேர்தல் சமயங்களில் இவர்கள் அள்ளி வீசும் இலவச வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்கும் வாக்காளர்களின் வாழ்க்கையில் விழுவது பெரிய இடி. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
நில உரிமையாளர்கள் என்றால் உரிய இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும்… இல்லையேல், சமரச பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வை அடையவேண்டும்… 50 ஆண்டுகாலம் இந்நிலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மனிதாபிமானம் காட்டுவதில் தவறேதுமில்லை…!!!!!