‘இஸ்லாமிய நாடா, சமயச் சார்பற்ற நாடா? தலைமை நீதிபதிதான் முடிவு சொல்ல வேண்டும்’

cjமலேசியா  இஸ்லாமிய  நாடா  அல்லது  சமயச்  சார்பற்ற  நாடா  எனத்  தலைமை  நீதிபதி  அரிப்பின்  ஜக்கரியாதான்  ஒரு  முடிவு சொல்ல  வேண்டும்  என்று  கல்வியாளரும்  அரசமைப்பு  வல்லுனருமான  அப்துல்  அசீஸ்  பாரி  கூறுகிறார்.

கூட்டரசு  அரசமைப்பின்  பகுதி  130-ஐப்  பயன்படுத்தி  அரசாங்கம்,  இவ்விவகாரத்துக்குக்    விளக்கம்பெற  வேண்டும்  என  பூச்சோங்  எம்பி  கோபிந்த்  சிங்  டியோ  கூறி  இருப்பதைத்  தாம்  ஒப்புக்கொள்வதாக  அப்துல்  அசீஸ் குறிப்பிட்டார்.

“இவ்விவகாரத்தில்  தலைமை  நீதிபதி  தம்  தலைமைத்துவத்தை  நிரூபிக்க  வேண்டும், சில  ஆண்டுகளுக்குமுன்  அமெரிக்க  உச்சநீதிமன்றம்  செய்ததுபோல”, என்றவர்  சொன்னார்.