பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம், மலேசியா சமயச்சார்பற்ற நாடல்ல என்று அறித்தது ஒரு பொறுப்பற்ற செயல் என மலேசிய இண்ட்ராப் இயக்கம் சாடியுள்ளது.
அமைச்சரின் அறிவிப்பு, ஏற்கனவே முஸ்லிம்- அல்லாதாரின் வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்து குளறுபடி செய்யும் முஸ்லிம் என்ஜிஓ-களை ஊக்கப்படுத்துவதுபோல் உள்ளது என இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி ஓர் அறிக்கையில் கூறினார்.
ஜமில் சுதந்திரத்துக்கு- முந்திய ஆவணங்களைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திய வேதமூர்த்தி, அமைச்சர் ஒன்று “விவரம் அறியாதவராக இருக்க வேண்டும் அல்லது அறிவிலியாக இருக்க வேண்டும் அல்லது வரலாறு தெரிந்தும் தெரியாதவர்போல் பேசுபவராக இருக்க வேண்டும்”, எனக் குறிப்பிட்டது.
அப்படியானால் மலேசியாவில் பிறந்த நான் என்ன சமயத்துக்கு சொந்தக்காரரன் என்று அந்த முட்டாள் அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்?
உண்மையான வரலாறு குழி தோண்டி புதைக்கப்பட
இன்னொரு கை கொடுத்தவர்கள் பக்கத்திலேயே
பதவி சுகம் ,பெரும் பணவான்கள் என இருக்க ,
எப்படி உண்மையான …என்பது வெளிவரும் ?
நாம் காலம் தோறும் இப்படி உரிமைக்கு … …,
நடத்த வேண்டியதுதான் … …, போராட்டம் !
அம்னோ மந்திரியின் கூற்றில் உண்மை இருப்பின் இந்நேரம் ஊரையே கூட்டியிருப்பான். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இவனின் இனத்துக்கு சாதகமான தீர்ப்பு வருமா என்ற அற்ப ஆசைதான் இந்த முயற்சி.!!!! சட்டம் குறிப்பிட்ட இனத்துக்காக விலைபோகுமா என்பதே இப்போதைய கேள்வி!!!!!!
யாருக்காகவோ அல்லது குறிப்பிட்ட மதத்துக்காகவோ சாதகமாக தீர்ப்பு வேண்டாம்.. அரசியலமைப்பு என்ன சொல்கிறதோ அதையே விளக்கமாக சொல்லவேண்டும்…
சரக்கு இல்லாத சக்கைகள் எல்லாம் அமைச்சராக இருந்தால் இப்படித்தான் நடக்கும்.
நம் நாட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணம் மதம் வெறி பிடித்த தகுதி இல்லாததவர்களை அமைசரக்குவது.
நம் நாட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணம் மதம் வெறி பிடித்த தகுதி இல்லாததவர்களை அமைசரக்குவது.
பல காலமாக மலேசிய இந்தியர்களை ஏமாற்றிய BN க்கு வாக்கு அளிக்க சொன்ன நீதான்யா வரலாற்றை திரும்பி பார்க்கவேண்டும் ! ஹிண்டாப்பை குட்டி சுவராக்கிவிட்டு கதையா பேசுற ?
தவறு செய்தவர்கள் திருந்டமாட்டார்களா பேசுபவர்களையும் வாயை அடைத்துவிட்டால் யார்தான் நமக்காக பேசுவது?யார் நமக்காக பேசுகிறார்களோ அவர்களை தட்டிக்கொடுங்கள்.