அரசாங்கம், மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரிய(ஐஆர்பி) சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் மீதான விவாதத்தை அக்டோபருக்குத் தள்ளிவைத்தது. அத்திருத்தங்கள் குறித்து பிகேஆர் தலைவர்கள் கவலைகொண்டு வாரம் முழுக்க தொடர்ந்து கொடுத்துவந்த அழுத்தத்தின் காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கம் ஐஆர்பி முதலீட்டு வாரியம் ஒன்றை அமைக்கும் நோக்கத்தில் அத்திருத்தத்தைத் தாக்கல் செய்திருந்தது. அது வரிசெலுத்துவோரின் பணத்தை முதலீடு செய்யும் விவகாரம் என்பதால் அதன் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
எனவே, அச்சட்டவரைவை அடுத்த கூட்டம்வரை தள்ளிவைக்கும் தீர்மானம் ஒன்றை நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்.
அதை “மக்களுக்குக் கிடைத்த இனிப்பான வெற்றி” என பிகேஆர்-இன் கிளானா ஜெயா எம்பி வொங் சென் வருணித்தார்.
மக்களுக்கு கிடைத்த இனிப்பான வெற்றி என்றால் என்ன அர்த்தம்…புரிய வில்லை.