டிஏபி மூத்த தலைவரும் கேளாங் பாத்தா எம்பியுமான லிம் கிட் சியாங் காலமானார் என முகநூலில் செய்திகளை உலவ விடுவது “பொறுப்பற்ற செயல்” என பினாங்கு கெராக்கான் கண்டித்துள்ளது.
அச்செயல்களைப் “பண்பற்ற, தீயச் செயல்கள்” எனக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஓ தொங் கியோங் வருணித்தார்.
“சமுதாயத்தில் விஷத்தைப் பரப்பும் இப்படிப்பட்ட மோசமான கலாச்சாரத்தை ஒடுக்கவும் தடுக்கவும்” மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம், போலீசார், இணையப் பயனர்கள் ஆகியோர் ஒத்துழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சில தலைவர்களை, பிரபலமானவர்களை, அரசியல்வாதிகளைப் பிடிக்காதிருக்கலாம். ஆனால், அவர்களைப் பற்றிப் பதிவிடும் செய்திகள் உண்மையானவையாக இருக்க வேண்டும், பொய்களைப் பரப்பக் கூடாது என ஓ குறிப்பிட்டார்.
1969லிருந்து இன்னும் அரசியலில் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த லிம் கிட் சியாங் ஏன் ஓய்வெடுத்துக்கொள்ளவில்லை. அவருக்கு பிறகு அரசியலில் வந்தவர்களில் பெரும்பாலோர் இன்று அரசியலில் இல்லை.
மற்றவர்களுக்கு குறிப்பாக இளையர்களுக்கு இந்த வாய்ப்புகள் விட்டுக் கொடுத்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையே ஒரு காரணமாக வைத்து லிம் கிட் சியாங் ஓய்வெடுப்பது நல்லது, புதிய ரத்தங்கள் அரசியலில் இனி உலா வரட்டும்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் ! இன்னும் 100 ஆண்டுகள் இவரின் பெயரும் புகழும் மணம் வீசிக்கொண்டே இருக்கும் !! கழுத விட்டுத் தள்ளு !!
யார் அந்த நபர் மூலை மங்கி போனவனோ.தஞ்சோங் ரம்புதானில் சேர்க்க வேண்டிய நபர் வெளியில் இருந்தால் அபாயம்,பிறகு நாளை யாரை சொல்லுவானோ.காவல் துறை அந்த நபரை நீதியின் முன் நிறுத்தி ஜனநாயக கடமையை நிலை நிறுத்த வேண்டும்.சட்டம் ஒழுங்கு காக்க படவேண்டும்.
லிம் கிட் சியாங் ஒரு அருமையான அரசியல்வாதி. மக்களுக்காக போராடியதில் பல முறை சிறை சென்றவர். பினாங்கைக் கைப்பற்ற பல முறை முயன்றார். எப்படியோ, தனது மகன் மூலம் அதை சாதித்துவிட்டார். ஓய்வெடுத்துக் கொண்டு, மகாதீரைப் போன்று அரசியல் விமர்சனங்களை, செய்துக் கொண்டிருக்கலாம். முன்பு துங்கு அப்துல் ரஹ்மானும், டான் சீ குன் போன்றவர்களும் இதையே செய்தார்கள்.
அவர் எதற்க்காக ஓய்வு எடுக்க வேண்டும் ?
கர்பால் போன்று இவறும் சிங்கம்தான் தொடரட்டும் பணி வாழ்க ! வாழ்க !! வாழ்க!!!
லிம் கிட சியாங் சேவை இந்த நாட்டுக்கு தேவை தேவை .
லிம் கிட் சியாங் ஒரு சீனராக இருக்கலாம். இனவாதியாகக் கூட இருக்கலாம். ஆனால், அவர் போன்றவர்களால்தான் இந்த நாட்டில் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு பல நன்மைகள் ஏற்பட்டன, ஏற்படுகின்றன, ஏற்படும். மறந்துவிடாதீர்கள்.
இவர் ஒரு சிரந்தெ எதிர்க்கட்சி தலைவர். இவர் இன்னும் பல kalam
வாழவேண்டும்.