பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் ஏற்பாடு செய்திருந்த தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை விளக்கக் கூட்டத்துக்குச் சென்ற பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் இருவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அது ஊடகவியலாளர்களும் அரசாங்க ஊழியர்களும் மட்டுமே கலந்துகொள்ளும் கூட்டமாம்.
பிகேஆரின் பாயான் பாரு எம்பி சிம் ட்ஸே ட்ஸின், பாஸின் கோலா திரெங்கானு எம்பி ராஜா கமருல் பாஹ்ரின் ராஜா அஹமட் ஷா ஆகிய இருவரும் பால் லா என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்பதற்காகக் கூட்டத்துக்குச் சென்றார்கள்.
ஆனால், கூட்டத்தின் தொடக்கத்திலேயே ஊடகங்களைச் சேராதவர்களும் அரசாங்க ஊழியர்- அல்லாதவர்களுக்கும் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
“திருவாளர் வெளிப்படைத்தன்மையே(லாவ்) அவ்வாறு கேட்டுக்கொண்டார்”, என ராஜா கமருல் கூறினார்.
“அளிக்கப்படும் விளக்கம் எல்லா ஊடகங்களுக்கும் ஒளிபரப்படும் என்கிறார்கள். பிறகு ஏன், இரகசியமாக நடத்த வேண்டும்”, என்றவர் வினவினார்.
இது சரியல்ல ஒரு மக்கள் பிரதிநீதி,மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட ஒரு பிரதிநீதியை எப்படி கூட்டதில் இருந்து வெளியேற்ற முடியும் இது என்ன நியாயம்?இது தான் கணகறிகை விளக்க கூட்டமா?
இது தான் அம்னோ தேசிய முன்னணியின் இரட்டை வேடம்.மாற்று கருத்துகளை ஏற்றுகொள்ளும் அறிவு இல்லாதவர்கள்.ஜனநாயகத்தில் மாற்று கருத்துகளுக்கு இடம் உண்டு என்பதை எற்றுகொல்லாத முதலாளித்துவ கொள்கை காரார்கள்.அம்னோவை வீழ்த்தினால் நாடு நலம் பெரும் .மக்கள் நன்மை அடைவார்கள்.இதை நாட்டு மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.