தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை வெளிச்சம்போட்டுக் காட்டும் பண விரயங்களுக்கு அந்தந்த அமைச்சுக்களுக்குத் தலைமைதாங்கும் அமைச்சர்களையே பொறுப்பாக்க வேண்டும் என ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் வலியுறுத்தியுள்ளது.
அப்படிச் செய்யாதவரை கணக்கறிக்கையை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை என்று அதன் தலைவர் அக்பர் சத்தார் கூறினார்.
“தங்களின் நேர்மையையும் தங்களுக்குக் கீழே பணிபுரிவோரின் நேர்மையையும் கட்டிக்காப்பது அமைச்சின் தலைவர்கள் என்ற முறையில் ஒவ்வோர் அமைச்சரின் கடமையாகும்”, என்றாரவர்.
நடைமுறைகள் பின்பற்றப்படாத இடங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தக்க பாடமாக அமையும் என அக்பர் கூறினார்.
இவ்விசயத்தில் அரசாங்கம் “மெத்தனமாக நடந்துகொள்கிறது”, அதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் இப்படிப்பட்ட முறைகேடுகள் திரும்பத் திரும்ப நடக்கின்றன என்றாரவர்.
அமைச்சர்கள் மட்டுமா? அதற்க்கு மேல்?
கல்வி அமைச்சன் cuM செம்பட துறை அமைச்சன் சுற்றுலா செய்து முழுங்கிய பணம் மில்லியன் கணக்கில் செலவித்து உதவாக்கரை கல்வி முறை அமல் படுத்தி கல்வி துறையை நாசமாக்கிய பணம் யார் பதில் சொல்வது
இது போன்ற அரசு பண விரயம்செயும் அதிகாரிகளை தண்டிக்க முடியாது என்று ஏற்கனவே கூறிவிட்டார்கள் !! சட்ட திருத்தும் கொண்டுவராத பட்சத்தில் இது போன்ற ஊழல்களை தடுக்கவே முடியாது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கையிருப்பை காலிசெய்ய வேண்டியே பல தில்லுமுல்லுகள் அரங்கேறுகிறது ? 6 மாத்திக்கு ஒரு முறை கணக்காய்வு செய்யவேண்டும் , எந்த கால கட்டத்தில் அதிக பணமோசடி நடக்கின்றது என்பதை கண்டு கட்டுபடுத்தலாம் !! ஆனால் பெருச்சாளிகளை ஒழிக்கமுடியாது ??
இந்த நடப்பு அரசாங்கமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்,